/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சேரன்மகாதேவி பகுதியில் விதை கிராம பயிற்சி
/
சேரன்மகாதேவி பகுதியில் விதை கிராம பயிற்சி
ADDED : செப் 03, 2011 02:38 AM
திருநெல்வேலி:சேரன்மகாதேவி வட்டாரத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ்
விவசாயிகளுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடந்தது.பயிற்சியில் நெல்லை வேளாண்மை
துணை இயக்குநர் (மத்திய திட்டம்) குமாரசாமி விதை கிராம திட்டங்கள்
பற்றியும், நெல்லை தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார்
உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், திருந்திய
நெல் சாகுபடி பற்றியும் கூறினர்.
சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குநர்
ஜெயசெல்வின் இன்பராஜ் திட்டங்கள் பற்றி கூறினார்.ஏற்பாடுகளை வேளாண்மை
அலுவலர் பரசிவம், துணை வேளாண்மை அலுவலர் நாகூர்மீரான், உதவி வேளாண்மை
அலுவலர்கள் பில்லி கிரஹாம், பாலசுப்பிரமணியன், சேவியர், கலா, செல்வி
செய்திருந்தனர்.