/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
செங்கோட்டையில் விநாயகர் சிலை விசர்ஜனம்
/
செங்கோட்டையில் விநாயகர் சிலை விசர்ஜனம்
ADDED : செப் 03, 2011 02:40 AM
செங்கோட்டை:செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்த 23 சிலைகள் நேற்று குண்டாறு அணைப் பகுதியில் விசர்ஜனம்
செய்யப்பட்டது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை பகுதிகளில்
விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது.
இந்த சிலைகள் விசர்ஜனம் செய்யும் வகையில் நேற்று மதியம் ஊர்வலமாக எடுத்து
செல்லப்பட்டது. செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோயில் பகுதியில் இருந்து
ஊர்வலமாக விநாயகர் சிலைகள் கே.சி.ரோடு, மேலூர் செங்கோட்டை, டவுன் ஹால் ரோடு
வழியாக குண்டாறு அணைப் பகுதிக்கு சென்றது.
அங்கு விநாயகர் சிலைகள்
விசர்ஜனம் செய்யப்பட்டன.முன்னதாக ஊர்வலத்தில் பா.ஜ., மாநில செயலாளர்
சீனிவாசன், மாநில துணை செயலாளர் சாரதா பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர்
பாண்டித்துரை, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமரேசசீனிவாசன், நகர தலைவர்
முத்துக்குமார், இளைஞரணி தலைவர் தங்கராஜ், வேம்பு, முருகேசன், மாரிமுத்து,
குற்றாலம் செந்தூர்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விநாயகர் சிலை
ஊர்வலத்தை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை
மேற்கொண்டிருந்தனர்.