/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
செங்கோட்டை நகராட்சி திமுக., வேட்பாளர் மனுத்தாக்கல்
/
செங்கோட்டை நகராட்சி திமுக., வேட்பாளர் மனுத்தாக்கல்
செங்கோட்டை நகராட்சி திமுக., வேட்பாளர் மனுத்தாக்கல்
செங்கோட்டை நகராட்சி திமுக., வேட்பாளர் மனுத்தாக்கல்
ADDED : செப் 28, 2011 12:38 AM
செங்கோட்டை : செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக., வேட்பாளர் ரஹீம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.செங்கோட்டை நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக., சார்பில் தற்போதைய நகராட்சி தலைவர் ரஹீம் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு ரஹீம் நேற்று மனுவை நகராட்சி தேர்தல் அதிகாரி சீதாமோகனிடம் தாக்கல் செய்தார்.
முன்னதாக திமுக., வேட்பாளர் ரஹீம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு முக்கிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மனுத்தாக்கலை மேற்கொண்டார். வேட்பாளருடன் இசக்கிமுத்து, குட்டிராஜா, வசந்தி ஐயப்பன், சக்திவேல், பீர்முகம்மது, சந்த்ரு, வக்கீல் ஜெயக்குமார், குமரகுரு உட்பட செங்கோட்டை நகர திமுகவினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.