/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
இலவச லேப்டாப் வழங்க கோரி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

ADDED : செப் 28, 2011 12:44 AM
திருநெல்வேலி : அனைத்து அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்க கோரி பாளை., அரசு சட்டக்கல்லூரி முன் கையெழுத்து இயக்கம் நடந்தது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப் டாப் வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் காலியாகவுள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு சட்டக்கல்லூரி முன் கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய மாணவர் சங்க மாநகர துணை தலைவருமான மகேஷ் குமார் தலைமை வகித்தார். கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தலைவர் பேச்சிமுத்து துவக்கி வைத்தார். மாநகர தலைவர் நிஜாம், மாணவர்கள் ராஜ்குமார், ராஜா, மாரியப்பன் உட்பட 60 மாணவர்கள் கலந்து கொண்டனர்.