/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
காரிகோவில் கடற்கரையில் ஆமை முட்டை சேகரிப்பு
/
காரிகோவில் கடற்கரையில் ஆமை முட்டை சேகரிப்பு
ADDED : ஜன 15, 2025 11:56 PM
கூடங்குளம் : நெல்லை மாவட்டம் கூடங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் ஆண்டுதோறும் ஜன., முதல், ஏப்., வரை, 'ஆலிவ் ரெட்லி' எனும் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக, கடற்கரையில் முட்டைகளை இட்டுச் செல்வது வழக்கம்.
அவ்வாறு கடலோரங்களில் கிடைக்கும் ஆலிவ் ரெட்லி ரக ஆமைகளின் முட்டைகளை பாதுகாப்பு பெட்டகங்களில் குஞ்சுகளை பொரிப்பதற்காக பாதுகாத்து, குஞ்சுகள் பொரித்த பின் அவை கடலில் விடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கூத்தன்குழி அருகேயுள்ள காரிகோவில் கடற்கரை பகுதியில், 120 ஆலிவ் ரெட்லி ரக ஆமைகளின் முட்டைகள் கடற்கரையில் இருந்ததை அப்பகுதி மீனவர்கள் கண்டனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி கூடங்குளம் கடலோர பாதுகாப்பு படை போலீசார் மற்றும் மாவட்ட வனச்சரக அலுவலர்கள் அங்கு சென்று, அந்த ஆமை முட்டைகளை சேகரித்தனர்.
பின், அவை கூட்டப்பனை பாதுகாப்பு பெட்டகத்திற்கு வனச் சரக அலுவலர்களால் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டன.

