/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் கைது
/
தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் கைது
தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் கைது
தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய இரண்டு பேர் கைது
ADDED : நவ 22, 2024 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில், அமரன் படம் திரையிடப்பட்டு உள்ள அலங்கார் தியேட்டர் மீது, கடந்த 15ம் தேதி அதிகாலையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இருவர் குண்டு வீசும் காட்சிகள், 'சிசிடிவி'யில் பதிவாகி உள்ளன. பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், மேலப்பாளையம் போலீசார் இணைந்து 10க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்தனர்.
இதில், பெட்ரோல் குண்டு வீசியது மேலப்பாளையம் ரசீன், 27, புகாரி, 28, என தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், கைது நடவடிக்கை குறித்த தகவல்களை, போலீசார் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.