ADDED : ஏப் 30, 2026 11:34 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனில் மார்ச் 29ல் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பொது ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதாக மாரியப்பன் மகன் இசக்கிமுத்து 23, பாலமுருகன் 19, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இருவரும் தொடர்ந்து சமூக அமைதியை குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். எனவே இருவரும் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டனர்.
