ADDED : ஆக 26, 2026 11:10 PM

திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே ஜீப்- வேன் மோதியதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இருவர் பலியாயினர். 17 பேர் காயமடைந்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் இளையராஜா, 34. இவரது நண்பர்கள் நம்பிகுமார் (எ) மருது 30, உதயசங்கர் 32, களஞ்சியம் 30, ஜான் 33, தேசிகன், 35. இவர்கள் நேற்று முன்தினம் இரவு ஜீப்பில் குற்றாலத்துக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
நேற்று அதிகாலை கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை- -சங்கரன்கோவில் ரோட்டில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அதனை இளையராஜா ஓட்டினார். இதேபோல் தேனி மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குடும்பத்தினர் சுற்றுலா வேனில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு வந்தனர். அதிகாலை 3:30 மணியளவில் பொதிகை நகர் பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஜீப் மீது வேன் மோதியது. இதில் ஜீப் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய இளையராஜா, மருது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஜீப்பில் வந்த உதயசங்கர், களஞ்சியம், ஜான், தேசிகன் மற்றும் வேனில் வந்த 13 பேர் என மொத்தம் 17 பேர் படுகா யமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். குருவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
