/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
/
நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
நீதிமன்றம் அருகே நடந்த கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
ADDED : டிச 28, 2024 06:53 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே நடந்த வாலிபர் கொலையில் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அதை கண்டித்து உறவினர்கள் மேல்நிலை குடிநீர் தொட்டி மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே டிச., 20 மாயாண்டி 23, என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 2023ல் நடந்த ஒரு கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களின் ஊரான கீழநத்தத்தைச் சேர்ந்த ராஜா 25, சுரேஷ் 35, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கொலையில் தொடர்புடையவர்கள் ஏற்கனவே போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்து விட்டனர். மேலும் இருவரை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதான ராஜாவின் அக்காள் பேச்சியம்மாள் 35, உறவினர்களுடன் அங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி அமர்ந்து நேற்று இரவில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

