/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கார்-டூவீலர் மோதல் இரு பெண்கள் பலி
/
கார்-டூவீலர் மோதல் இரு பெண்கள் பலி
ADDED : ஆக 25, 2025 01:26 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கார் பின் டயர் வெடித்து எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில் அரசு மருத்துவமனை பல் சிகிச்சைப் பிரிவு ஊழியர் உட்பட 2 பெண்கள் இறந்தனர். தந்தை, மகள்கள் என 3 பேர் படுகாயமடைந்தனர்.
திருநெல்வேலி டவுன் சுடலை மாடன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் 50. டூவீலர் உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி வருணா 46. மகள்கள் பிரவீனா, ரிஷியா ஆகியோர் நேற்று மதியம் காரில் துாத்துக்குடி நோக்கி சென்றனர். காரை சுரேஷ் ஓட்டினார்.
கே.டி.சி.நகர் அருகே சென்றபோது பின்பக்க டயர் திடீரென வெடித்து கார் பல்டியடித்தது. கார் கட்டுப்பாட்டை இழந்து இடது புற அணுகு சாலையில் எதிரே டூவீலரில் வந்த திருநெல்வேலி அரசு மருத்துவமனை பல் சிகிச்சை பிரிவு ஊழியர் மலர் 51, மீது மோதியது. அவர் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் இருந்த சுரேஷ் குடும்பத்தினர் நால்வரும் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமுற்றனர். அதில் சிறிதுநேரத்தில் சுரேஷ் மனைவி வருணாவும் இறந்தார்.
படுகாயமடைந்த தந்தை மற்றும் மகள்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். போலீசார் விசாரித்தனர்.