/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மைத்துனரை கொலை செய்த மாமா, நண்பருடன் சிக்கினார்: அக்கா கணவர், நண்பர் கைது

UPDATED : அக் 31, 2025 06:27 AM
ADDED : அக் 31, 2025 12:18 AM
திருநெல்வேலி:  திருநெல்வேலி பெரியபாளையத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி வெள்ளபாண்டி, 27. இவரது மனைவி சுதா. சுதாவின் தம்பி பெருமாள், 20, வெல்டிங் தொழிலாளி. திருட்டு வழக்கில் சிறை சென்ற வெள்ளபாண்டி ஜாமினில் வந்த பின், குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் மனைவி சுதா தனியே வசித்து வந்தார்.
மைத்துனர் பெருமாளை சமாதானம் பேசுவதற்காக வெள்ளபாண்டி, நேற்று முன்தினம் இரவில் அழைத்து சென்றார். வெள்ளபாண்டி, அவரது நண்பர் மதுபாலன், 22, பெருமாள் மேலபாட்டம் காட்டுப் பகுதியில் மது அருந்தியபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த வெள்ளபாண்டி, தான் அணிந்திருந்த லுங்கியால் பெருமாளை கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை கல்வெட்டான் குழியில் வீசி தப்பினர். தாலுகா போலீசார் வெள்ளபாண்டி, மதுபாலனை கைது செய்தனர்.
கல்வெட்டான்குழி நீரில் மூழ்கிய பெருமாளின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.