/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகாரில் வழக்கு
/
பல்கலை பேராசிரியர் மீது பாலியல் புகாரில் வழக்கு
ADDED : மே 01, 2025 01:22 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் மீது பெண் உதவி பேராசிரியை அளித்த பாலியல் புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்த மாணவி அங்கேயே தற்காலிக பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வேதியியல் பேராசிரியர் சி.கண்ணன் 55, என்பவரிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டார். அப்போது அவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 4 ஆண்டுகளுக்கு முன் முந்தைய துணைவேந்தர் பிச்சுமணியிடம் புகார் தெரிவித்தார். இருப்பினும் விசாரணை முறையாக நடக்கவில்லை. இதனிடையே சில நாட்களுக்கு முன் மீண்டும் அந்தப் புகாரை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பினார். எனவே பல்கலையில் இத்தகைய பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்ள ஐ.சி.சி., குழுவினர் விசாரிக்க தற்போதைய துணைவேந்தர் சந்திரசேகர் உத்தரவிட்டார்.
இதனிடையே பெண்ணின் புகாரின்படி, திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் போலீசார் பேராசிரியர் கண்ணன் மீது 354 ஏ பாலியல் குற்றச்சாட்டு பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.