ADDED : அக் 07, 2025 08:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி :குடும்ப தகராறில் வி.ஏ.ஓ., வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் வசிப்பவர் சக்தி யோகேஸ்வரன், 30. இவர், துாத்துக்குடி மாவட்டம், வசவப்பபுரத்தில் வி.ஏ.ஓ.,வாக இருந்தார். இவருக்கு மனைவியும், ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த சக்தி யோகேஸ்வரன், அக்., 4ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். மனைவி அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்த சக்தி நேற்று இறந்தார். சிவந்திபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.