/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை பழைய பஸ் நிலைய கட்டுமானத்தில் விதிமீறல்: மாநகராட்சிக்கு நெருக்கடி நெல்லை மாநகராட்சிக்கு நெருக்கடி

ADDED : நவ 02, 2025 02:20 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானத்தில் விதிமீறல்கள் உள்ளதால், திருத்தி மீண்டும் விண்ணப்பிக்க நகர ஊரமைப்பு அலுவலகம் நெல்லை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள பழைய பஸ் ஸ்டாண்ட், 2018ல் இடிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 85 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது.
சுகாதார சான்றிதழ், தீயணைப்பு துறையின் அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்கள் பெறப்படவில்லை. இருப்பினும், 2024 பிப்., 19ல் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
திறப்பு விழா நடந்த தினமே சில பகுதிகள் இடிந்து விழுந்தன. இது தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. முன் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட இக்கட்டடத்தில், மாநகராட்சி புதிய கடைகளை திறந்துள்ளது.
சமூக ஆர்வலர் பெர்டின் ராயன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 'ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டுக்கு மாநகராட்சி உரிய அனுமதி பெற்றதா' என, தகவல் கேட்டிருந்தார்.
அதற் கான பதிலில், 'ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தில் விதிமீறல்கள் உள்ளன. அவற்றை சரிசெய்து புதிதாக அனுமதி பெறுமாறு மாநகராட்சிக்கு நகர ஊரமைப்பு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது' என, தெரிவித்துள் ளது.