/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கணவரை பிரிந்த பெண் கொலை; குத்தி கொன்ற காதலன் கைது
/
கணவரை பிரிந்த பெண் கொலை; குத்தி கொன்ற காதலன் கைது
கணவரை பிரிந்த பெண் கொலை; குத்தி கொன்ற காதலன் கைது
கணவரை பிரிந்த பெண் கொலை; குத்தி கொன்ற காதலன் கைது
ADDED : ஜன 01, 2025 01:08 AM
திருநெல்வேலி : தென்காசி மாவட்டம் சிவகிரி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ராமேஸ்வரன் மனைவி பாஞ்சாலி, 35. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட தகராறில் பாஞ்சாலி தனியே வசித்து வந்தார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சமுத்திரவேல், 39, என்பவருக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சமீப காலமாக பாஞ்சாலி, சமுத்திரவேலுடன் பேசுவதை தவிர்த்தார். நேற்று முன்தினம் இரவில் சமுத்திரவேல், பாஞ்சாலியை ரோட்டிற்கு வரவழைத்து பேசிக் கொண்டிருந்தபோது, ஆத்திரத்தில் கத்தியால் குத்தினார்.
இதில் பாஞ்சாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமுத்திரவேலுவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.