/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஒர்க்ஷாப் உரிமையாளர் கொலை: வாலிபர் கைது
/
ஒர்க்ஷாப் உரிமையாளர் கொலை: வாலிபர் கைது
ADDED : ஜன 17, 2026 06:33 AM
திருநெல்வேலி: முக்கூடல் அருகே ஒர்க் ஷாப் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே இடைகாலை அடுத்த அடைச்சாணியை சேர்ந்தவர் சரவணன் 47. அப்பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். நேற்று காலை அடைச்சாணி அருகே பாலத்தில் சரவணன் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். பாப்பாக்குடி போலீசார் விசாரித்தனர்.
சரவணனின் மகளை அவரது கொழுந்தியாள் (மனைவியின் தங்கை) மகன் பாலமுருகன் திருமணம் செய்ய விரும்பியுள்ளார்.
ஆனால் அண்ணன் தங்கை உறவு என்பதால் அதற்கு சரவணன் குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் ஆத்திரமுற்ற பாலமுருகன், சரவணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

