/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
டி.எஸ்.பி., மீது இளம்பெண் நெல்லை டி.ஐ.ஜி.,யிடம் புகார்
/
டி.எஸ்.பி., மீது இளம்பெண் நெல்லை டி.ஐ.ஜி.,யிடம் புகார்
டி.எஸ்.பி., மீது இளம்பெண் நெல்லை டி.ஐ.ஜி.,யிடம் புகார்
டி.எஸ்.பி., மீது இளம்பெண் நெல்லை டி.ஐ.ஜி.,யிடம் புகார்
ADDED : ஏப் 26, 2025 02:27 AM
திருநெல்வேலி:துாத்துக்குடியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரவுடி தென்மலை தென்குமரனை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமினில் வந்தவர், இளம்பெண் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்த முயற்சித்தார். இளம்பெண் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தினர். உயர் அதிகாரிகளுக்கு அப்பெண் புகார் அனுப்பினார். தென்குமரன் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனாலும், அவரை கைது செய்யவில்லை.
இதற்கிடையே, தென்குமரனிடம் புகார் பெற்று, இளம்பெண் மீது வன்கொடுமை சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். துாத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி., சுதீர், தென்குமரனுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர் மீதான புகாரை வாபஸ் பெற, பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தியும், டி.எஸ்.பி., மிரட்டல் குறித்தும், திருநெல்வேலி டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹதிமணியிடம், அப்பெண் நேற்று மனு கொடுத்தார். இது தொடர்பான விசாரணை நடக்கிறது.