ADDED : மார் 07, 2026 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மானுார் அருகே கம்மாளங்குளத்தை சேர்ந்த பிச்சையா மகன் பெருமாள் 50. கூலித்தொழிலாளி.
நேற்று மாலை 4:00 மணிக்கு அவரது வீட்டு முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மானுார் போலீசார் விசாரித்த நிலையில்
அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சுதர்சன் 24 , என்பவர் அருகில் தேனீர்குளத்தில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்று மது அருந்திவிட்டு பெருமாளை கொலை செய்து உடலை வீட்டிற்குள் போட்டு பூட்டிவிட்டுவந்ததாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரிவித்துள்ளார். போலீசார் வீட்டிற்கு சென்று உடலை மீட்டு பின்னர் சுதர்சனை கைது செய்தனர்.
சுதர்சனின் தாயாருக்கும் , பெருமாளுக்கும் பழக்கம் இருந்ததால் ஆத்திரத்தில் அவர் கொலை செய்ததாக தெரிவித்தனர்.

