ADDED : மார் 17, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பெருமாள்குளத்தை சேர்ந்தவர் ஜான்சன், 30; பீடி கம்பெனி நடத்தி வருகிறார். அங்கு கோயில்ராஜ் என்பவருக்கும், சம்பத்ராஜா என்பவருக்கும் தகராறு நடந்தது. இதில், ஜான்சன் கோயில்ராஜ்க்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். சம்பத் ராஜா தரப்பினர் ஜான்சன் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை ஜான்சன், 30, அவரது தம்பி ஆல்பர்ட் ஜெயக்குமார், 23, ஆகியோர் பீடி கம்பெனி முன்பாக நின்ற போது அங்கு வந்த சம்பத்ராஜா, டாலி , பிரைட்சன் ஆகியோர் ஜான்சனையும், ஆல்பர்ட் ஜெயக்குமாரையும் அரிவாளால் வெட்டியதில் ஆல்பர்ட் இறந்தார். ஜான்சன்சிகிச்சையில் உள்ளார்.

