ADDED : ஆக 18, 2025 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: காதல் தகராறில் மகளின் காதலனை தந்தை கத்தியால் குத்தியதில், அவர் படுகாயமடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே சிதம்பராபுரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி சிவக்குமார், 29.
இவர், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித் தார். ஒரே சமூகத்தவராக இருந்தாலும் காதலுக்கு அப்பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, சில நாட்களுக்கு முன் சிவக்குமாரை பார்த்த பெண்ணின் தந்தை சந்திரன், 53, அவரை கத்தியால் குத்தினார்.
மார்பில் காயமுற்ற சிவக்குமார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

