sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அவல நிலையில் ஆசியாவின் முதல் பார்வையற்றோர் பள்ளி அரசின் "பார்வை' திரும்புமா?

/

அவல நிலையில் ஆசியாவின் முதல் பார்வையற்றோர் பள்ளி அரசின் "பார்வை' திரும்புமா?

அவல நிலையில் ஆசியாவின் முதல் பார்வையற்றோர் பள்ளி அரசின் "பார்வை' திரும்புமா?

அவல நிலையில் ஆசியாவின் முதல் பார்வையற்றோர் பள்ளி அரசின் "பார்வை' திரும்புமா?


ADDED : ஜூலை 14, 2011 10:44 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லியில் இயங்கி வரும் ஆசியாவிலேயே முதல் பார்வையற்றோருக்கான, அரசு பள்ளி எப்போது இடிந்து விழுமோ என்ற அவல நிலையில் உள்ளது.

கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு பரிந்துரை அனுப்பியும், அரசின், 'பார்வை' பார்வையற்றோர் பள்ளி மீது விழவில்லை. ஆசியாவிலேயே முதல் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி பூந்தமல்லியில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு, 124 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளி வளாகத்தில், பார்வையற்றோருக்கான அரசு தொழிற் பயிற்சி மையம், பார்வையற்றோருக்கு கற்பிக்கும் மண்டல ஆசிரியப் பயிற்சி மையம், மண்டல பிரெய்ல் அச்சகம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான, இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம் போன்ற மையங்கள் இயங்கி வருகின்றன.



இங்கு கல்வி கற்கும் அனைத்து பார்வையற்ற மாணவர்களுக்கும் உணவு, தங்குமிடம் மற்றும் சீருடை அரசால் வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் பார்வையற்ற மாணவ மாணவியர் என, இருபாலரும் கல்வி கற்று வந்தனர். பின், 1996ம் ஆண்டு பார்வையற்ற மாணவியர் ஐந்தாம் வகுப்பு முடித்ததும், ஆறாம் வகுப்பு திருச்சிக்கு அனுப்பப்பட்டனர். ஆரம்பத்தில், 950 மாணவ மாணவியர் படித்த இப்பள்ளியில் தற்போது, 250 பேர் மட்டுமே தங்கி, கல்வி கற்கின்றனர்.



இது குறித்து, பள்ளி ஆசிரியர் வில்லியம் டேவிட் கூறியதாவது: ஆரம்ப காலத்தில் பார்வையற்ற, 950 மாணவ மாணவியர் இங்கு கல்வி கற்றனர். 1996ம் ஆண்டு முதல் ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவிகள், திருச்சியில் ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை கல்வி கற்கின்றனர். தற்போது, 250 மாணவ மாணவியர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் படித்தவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதித்துள்ளனர். இங்கு படித்த சக்கரவர்த்தி என்பவர், இன்று விழுப்புரத்தில் மாஜிஸ்திரேட்டாகவும், ஏழுமலை என்பவர், தமிழ்நாடு சட்ட பல்கலைக் கழக விரிவுரையாளராகவும், மாநில கல்லூர், நந்தனம் கலை கல்லூரி உள்ளிட்ட பல அரசு கல்லூரிகளில் விரிவுரையாளராக பணிபுகின்றனர். இதே பள்ளியில் பயின்று, ஆசிரியர்களாகவும் இன்றும் பலர் பணிபுரிகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த பார்வையற்றோருக்கான பள்ளி, பராமரிப்பு இல்லாததால், படுமோசமாக உள்ளது. அதனால், 300 மாணவர்கள் தங்கும் விடுதியும், 24 வகுப்பறைகளும் புதிதாக கட்டிக் கொடுக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான, அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடம், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் முதலாம் உலகப்போரில், போர் வீரர்கள் இங்கு தங்கி, குதிரைகள் கட்டிவைத்திருந்த இடமாக இருந்தது. முதல் உலகப் போருக்குப் பின், ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், முற்றிலும் பார்வையற்றோருக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்படி, இக்கட்டடத்தை மதராஸ் ஊனமுற்றோருக்கான சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.



1931ல் 'விக்டரி மெமோரியல் பிளைண்டு ஸ்கூல்' என்று உருவான இப்பள்ளியில், பெல் என்ற ஆங்கிலேயர், முதல் பள்ளி முதல்வராக இருந்தார். முதலில் ஆரம்பக் கல்வியும், பின் தொழிற்கல்வியும் அளிக்கப்பட்டு வந்தது. முதல்வராக முதல் இந்தியர் ராஜப்பா ஜோசப், 1946 முதல் 1948 வரை பணியாற்றினார். இந்நிலையில், 1948ம் ஆண்டு தமிழக அரசு, இப்பள்ளியை எடுத்துக் கொண்டது. தமிழக அரசு, கட்டுப்பாட்டுக்குள் வந்த பின், பார்வையற்றோருக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வி வேண்டாம் என்ற நிலையை மாற்றி, உயர்நிலைப் பள்ளியாக தரத்தை உயர்த்தியது. 1956ம் ஆண்டு பதினோராம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டு, முதல் எஸ்.எஸ். எல்..சி., பொதுத்தேர்வு எழுதினர். 1978ம் ஆண்டு முதல் இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடங்கள், 124 ஆண்டுக்குமேல் பழமைவாய்ந்தவையாக காணப்படுகின்றன. மாணவர்களுக்கு புதிய விடுதிக் கட்டடமும், வகுப்பறைகளும் தற்போதைய தேவையாக உள்ளது



சமூகவிரோதிகள் அட்டகாசம் : பள்ளி வளாகத்தை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகள் முளைத்துள்ன. இங்கு வசிப்பவர்கள், கழிவுநீர் இணைப்புகளை வளாகத்திற்குள் விடுகின்றனர். மேலும், குப்பை கழிவுகளையும் கொட்டுகின்றனர். இதனால், பள்ளி மாணவ மாணவியர் சுகாதார சீர்கேடுக்கு ஆளாகின்றனர். பல முறை எச்சரித்தும், ஆக்கிரமிப்பு இடங்களில் வசிப்பவர்களை தடுக்க பள்ளி நிர்வாகிகள் முயற்சித்தும், வீண் தகராறு ஏற்படுகிறது. பள்ளிக்கென காவலாளி இல்லாததால், விடுமுறைநாட்களில் வளாகத்தில், சமூகவிரோதிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. போலீசும், ரோந்து வராததால் பள்ளி நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.



- ஜி.எத்திராஜுலு -








      Dinamalar
      Follow us