sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இலவச மாடு, ஆடு வழங்கும் திட்டம் :4 கிராம ஊராட்சிகள் தேர்வு

/

இலவச மாடு, ஆடு வழங்கும் திட்டம் :4 கிராம ஊராட்சிகள் தேர்வு

இலவச மாடு, ஆடு வழங்கும் திட்டம் :4 கிராம ஊராட்சிகள் தேர்வு

இலவச மாடு, ஆடு வழங்கும் திட்டம் :4 கிராம ஊராட்சிகள் தேர்வு


UPDATED : ஆக 19, 2011 02:51 AM

ADDED : ஆக 19, 2011 02:48 AM

Google News

UPDATED : ஆக 19, 2011 02:51 AM ADDED : ஆக 19, 2011 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:தமிழக அரசின் இலவச கறவை மாடு, ஆடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திருவள்ளூர் மாவட்டத்தில், நான்கு கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.தற்போது பதவியேற்றுள்ள அ.தி.மு.க., அரசு தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் கிராமப்புறத்திலுள்ள ஏழை மக்களுக்கு இலவச கறவை மாடும், ஆடும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது.



இதன்படி, வரும் செப்., 15ம் தேதி, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளன்று இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்படுகிறது.இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:



இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம், நரசிங்கபுரம் ஆகிய இரு கிராம ஊராட்சிகளும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஆர்.கே.பேட்டை தாலுகாவுக்குட்பட்ட ஆதிவராகபுரம் கிராம ஊராட்சி மற்றும் எல்லாபுரம் தாலுகாவுக்குட்பட்ட ஏனம்பாக்கம் கிராம ஊராட்சி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.



பெண்களுக்கு முன்னுரிமை: பெண் பயனாளிகள் தான் இந்த இரு திட்டங்களையும் பெற தகுதியானவர்கள்.

கணவனை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்ற பெண்கள் குடும்பத்தை தலைமை ஏற்று செயல்படும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.



இத்திட்டத்தின் கீழ், ஒரு கிராமத்துக்கு 50 கறவை மாடுகளும், 30 ஆடுகளும் வழங்கப்படும். ஒரு மாடு வாங்க, 30 ஆயிரம் ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 2,500 ரூபாயும் செலவிடப்படும். இத்தொகையில் ஏதேனும் மிச்சம் ஏற்பட்டால், அத்தொகை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அளிக்கப்படும்.மேலும், ஆட்டு கொட்டகை அமைக்க, 500 ரூபாய் வழங்கப்படும். கறவை மாடுகள் ஆந்திர மாநிலத்திலும், ஆடுகள் தமிழகத்திலும் கொள்முதல் செய்யப்படும்' என்றார்.



பி.முரளிதரன்








      Dinamalar
      Follow us