/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரும்பு கம்பி திருட முயன்றவர் கைது
/
இரும்பு கம்பி திருட முயன்றவர் கைது
ADDED : ஜூலை 11, 2011 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் : சுவர் தடுப்பு, இரும்புக் கம்பிகளை திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
மீஞ்சூர் பகுதியில், தனியார் தொழிற்சாலை நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் பாதுகாவலர் தங்கமணி, 53, நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, சுவர் தடுப்பு இரும்புக் கம்பிகளை, வாலிபர் ஒருவர் திருடிக் கொண்டிருந்தார். அவரை கையும், களவுமாக பிடித்து, மீஞ்சூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் இரும்புக் கம்பிகளை திருட முயன்றவர், அத்திப்பட்டு சீனிவாசன் மகன் பாலாஜி, 34, என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.