sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிப்காட் பகுதியில் காவலாளியை தாக்கி8 இயந்திரங்கள் கொள்ளை

/

சிப்காட் பகுதியில் காவலாளியை தாக்கி8 இயந்திரங்கள் கொள்ளை

சிப்காட் பகுதியில் காவலாளியை தாக்கி8 இயந்திரங்கள் கொள்ளை

சிப்காட் பகுதியில் காவலாளியை தாக்கி8 இயந்திரங்கள் கொள்ளை


ADDED : ஜூலை 13, 2011 05:20 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் காவலாளியை தாக்கி, 8 இயந்திரங்களை கொள்ளையடித்த, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது சிக்காட் வளாகம்.

இங்குள்ள எடைத்தாங்கல் அறையின் பாதுகாவலராக, நேற்று முன்தினம் இரவு புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன், 46, பணியில் இருந்தார். அப்போது மர்ம நபர்கள் நான்கு பேர், காவலாளியை தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.உடனே அங்கிருந்த, 8 இயந்திரங்களையும், காவலாளியின் மொபைல் மற்றும் பைக்கையும் திருடிச் சென்றனர். இதன் மொத்த மதிப்பு, 70 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து, சிப்காட் இளநிலை பொறியாளர் சேவியர் பெர்னால்டு கொடுத்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us