/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'ஏசி' வசதியுடன் நுாலகம்
/
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'ஏசி' வசதியுடன் நுாலகம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'ஏசி' வசதியுடன் நுாலகம்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'ஏசி' வசதியுடன் நுாலகம்
ADDED : ஜூலை 23, 2024 01:14 AM

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக தரை தளத்தில், பொதுமக்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்காக நவீன நுாலகம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமான திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் இளைப்பாற பூங்கா உள்ளது.
கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோருக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், மாணவ, மாணவியருக்கும், கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில், குளிரூட்டப்பட்ட வசதியுடன் நுாலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், இயற்கை சூழலுடன் புத்தகம் வாசிக்கவும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அமைதியான சூழலில் புத்தகங்கள் படிக்கவும், கலெக்டர் அலுவலக 'போர்டிகோ' அருகில், வாசிப்பு குடிலும் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணி விரைவில் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில், பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.