/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன், ரூ.20,000 திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன், ரூ.20,000 திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன், ரூ.20,000 திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன், ரூ.20,000 திருட்டு
ADDED : ஜூலை 28, 2024 11:05 PM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த சின்னகாவணம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா, 53; தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி, கடந்த மாதம் குடியேறினார்.
ஆடி மாதம் துவங்கியதால், பழைய வீட்டில் இருந்த பொருட்களை இடமாற்றம் செய்யாமல், இரவில் மட்டும் குடும்பத்தினருடன் புதிய வீட்டில் துாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பழைய வீட்டை பூட்டிக்கொண்டு, புதிய வீட்டிற்கு குடும்பத்தினருடன் துாங்க சென்றார். நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 சவரன் நகை, 20,000 ரூபாய், 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது.
இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிந்த பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.