/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு
/
பூட்டிய வீட்டில் 10 சவரன் திருட்டு
ADDED : ஜூலை 09, 2024 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியைச் சேர்ந்வர் ஏசையா, 45, கட்டட மேஸ்தியான இவரது மனைவி சுதா, 40. நேற்று காலை ஏசையா கட்டட மேஸ்திரி பணிக்கும் சுதா டெய்லரிங் படிக்கவும் சென்று விட்டனர்.
சுதா நேற்று மதியம் 2:00 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சிடைந்தார்
பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 சவரன் நகை 20,000 ரூபாய் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து சுதா கொடுத்த புகாரின்படி செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.