ADDED : ஏப் 30, 2024 02:52 AM
அ நிறம் | அளவு
அரக்கோணம் : அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையிலான போலீசார் ரயில்களில் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை அரக்கோணத்தில் இருந்து கடப்பா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் சோதனை செய்தனர்.
அப்போது, ஒரு பெட்டியின் இருக்கையின் கீழ் 1,000 கிலோ எடையிலான ரேஷன் அரிசி 45 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ராணிபேட்டை மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்து, கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடுகின்றனர்.
