/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சட்டவிரோத மதுபாட்டில்கள் பறிமுதல் 11 பேர் கைது
/
சட்டவிரோத மதுபாட்டில்கள் பறிமுதல் 11 பேர் கைது
ADDED : ஜூன் 28, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சிவா தலைமையில் ஒரு வாரமாக பெரியபாளையம், வடமதுரை, மேட்டுப்பாளையம், சிவன்வாயல், வெள்ளியூர் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மேற்கண்ட பகுதியில் போலி மதுபாட்டில்கள் விற்ற, பாபு, 60, ராஜா, 60, குமாரி, 40, ரெஜினா, 40, நாகரத்தினம், 50, சூரியபாபு, 60, அலமேலு, 40, ஜெயந்தி, 45, சேகர், 60, ஜெயபால், 50, முத்துக்குமார், 43 ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து, 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.