/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1.2 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது
/
1.2 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது
ADDED : மே 12, 2024 09:08 PM
திருவள்ளூர்: திருமழிசை அடுத்த வண்டலுார் - நெமிலிச்சேரி நெடுஞ்சாலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வெள்ளவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வெள்ளவேடு காவல் ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் புறவழிச்சாலையில் டோல்கேட் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள டீ கடையில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கோலப்பன்சேரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் மகன்கள் ஜனா, 22, மற்றும் 16 வயது சிறுவன் சீனிவாசன் மகன் சஞ்சய், 23, பெருமாள் என்பவர் மகன் 15 சிறுவன் ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து நால்வரையும் கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதில் ஜனா, சஞ்சய் ஆகிய இருவரையும் சென்னை புழல் சிறையிலும், சிறுவர்கள் இருவரையும் கெல்லீஸ் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.