/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் கள்ளச்சாராய வேட்டை 12 பேர் கைது; 50 லிட்டர் பறிமுதல்
/
திருத்தணியில் கள்ளச்சாராய வேட்டை 12 பேர் கைது; 50 லிட்டர் பறிமுதல்
திருத்தணியில் கள்ளச்சாராய வேட்டை 12 பேர் கைது; 50 லிட்டர் பறிமுதல்
திருத்தணியில் கள்ளச்சாராய வேட்டை 12 பேர் கைது; 50 லிட்டர் பறிமுதல்
ADDED : ஜூன் 22, 2024 12:13 AM

திருத்தணி:கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் பலியானதை தொடர்ந்து, திருத்தணியில் நடந்த கள்ளச்சாரய வேட்டையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். 50 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து, திருத்தணி பகுதியில் போலீசார் நடத்திய வேட்டையில், 50 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளச்சாரய விற்பனை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வருவாய் கோட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று தாலுகாவில் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீவாசா பெருமாள் உத்தரவின்படி திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு போலீசார் இரு நாட்களாக கள்ளச்சாராய வேட்டை நடத்தி வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்ற நல்லாட்டூர் காலனி ஏகத்தா,48, நெமிலி காலனி ரோஜா, 27 ஆகிய இருவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
இரண்டாவது நாளான நேற்றும் கள்ளச்சாராய வேட்டை தொடர்ந்தது. நேற்று, நல்லாட்டூர் காலனி தமிழ் அழகன், 24, வனிதா, 48, நெமிலி காலனி கன்னியம்மா, 58, ராமாபுரம் ராஜேந்திரன் உள்பட 12 பேரை கைது செய்து, 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 70,000 ரூபாய்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில், டாஸ்மாக் மதுபாட்டில்களும் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.
போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தி, ராஜேந்திரன், 50, பார்த்தீபன், 45, வெங்டேசன், 35 உள்பட 13 பேரை கைது செய்து, 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை மூன்று தாலுகாவும், ஆந்திர மாநில எல்லையோரம் உள்ளதால், அதிகளவில் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, ஆந்திர மாநிலம் நகரி மற்றும் பாலசமுத்திரம் மண்டலங்களில், இல்லத்துார், தடுக்குப்பேட்டை, ஒஜிகுப்பம், அய்யன்கண்டிகை, பாலசமுத்திரம், மத்தவலம், மகாராஜாபுரம் உள்பட 10 கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி, இரு சக்கர வாகனங்களில் திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர்.
இதுதவிர திருத்தணி வழியாக, அரக்கோணம், வேலுார் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களுக்கும் கள்ளச்சாராயம் கடத்திச் செல்லப்படுகிறது.
ஆர்.கே.பேட்டை மது விலக்கு போலீசார் தொடர்ந்து ரெய்டு நடத்தியும், கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்ந்து வருகிறது.
ஆந்திராவில் இருந்து பாக்கெட்டுகளாக கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து, திருத்தணி கோட்டத்தில் ஆற்காடுகுப்பம், ராமாபுரம், எஸ். அக்ரஹாரம், செருக்கனுார், ஆர்.கே.பேட்டை, நல்லாட்டூர், நெமிலி, சிவாடா மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். தொடர்ந்து போலீசார் இங்கு சோதனை நடத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.