/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய 2 கார்கள் பறிமுதல்..
/
போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய 2 கார்கள் பறிமுதல்..
ADDED : மே 28, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வெள்ளை நிற பதிவெண் பலகையில், போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டி வந்த இரு கார்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விசாரணை செய்தனர்.
விசாரணையில். இந்த கார்கள் 'டூரிஸ்ட் கேப்' வாகனம் என கண்டறியப்பட்டது. மேலும் அரசுக்கு வரி செலுத்தாமலும், டூரிஸ்ட் வாகன அனுமதி பெறாமலும் இருந்தது. இதையடுத்து கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.