ADDED : மே 11, 2024 10:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை, மேற்கு மாம்பலம், கிருஷ்ணப்ப நாயக்கன் தெருவை சேர்ந்தவர் விவேக்,42.குடும்பத்துடன் வெளியூர்சென்றார்.
நேற்று முன் தினம் மாலை விவேக் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. புகாரின் படி குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சென்னை, ஓட்டேரியில் வசிப்பவர் விஜயலட்சுமி, 24. புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவு 1ல் வேலை பார்க்கிறார். கடந்த 8 ம் தேதி இரவு பணி முடித்து வீட்டுக்கு வந்து, ஹாலில் கதவை பூட்டாமல் உறங்கியுள்ளார்.
காலையில் எழுந்த போது, அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயின் மற்றும் 1 கிராம் டாலர் காணாமல் போயிருந்தது. ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.