/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'நான் முதல்வன்' திட்டத்தில் 2.41 லட்சம் வேலைவாய்ப்பு
/
'நான் முதல்வன்' திட்டத்தில் 2.41 லட்சம் வேலைவாய்ப்பு
'நான் முதல்வன்' திட்டத்தில் 2.41 லட்சம் வேலைவாய்ப்பு
'நான் முதல்வன்' திட்டத்தில் 2.41 லட்சம் வேலைவாய்ப்பு
ADDED : ஆக 31, 2024 11:03 PM
பொன்னேரி: பொன்னேரியில் நடந்த தனியார் கலைக்கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, 'நான் முதல்வன்' திட்ட தலைமை செயல் அலுவலர் ஜெயப்பிரகாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேற வேண்டும் எனபதற்காகவும் உருவாக்கப்பட்டதுதான் நான் முதல்வன் திட்டம்.
கடந்த, 2022ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு தேவையான திறன் பயிற்சிகளை பெறுவதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்வதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், 37 லட்சம் மாணவர்கள், 90,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த, கல்வியாண்டில், 1.43 லட்சம், இந்த கல்வியாண்டில், 98,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது.
இத்திட்டம் துவங்கப்படுவதற்கு முன், படித்து முடித்து வேலை வாய்ப்பு பெற முடியாமலும், குடும்ப சூழ்நிலையால் கல்வியை தொடர முடியாமல், தேர்வுகளில் அரியர் வைத்துள்ளவர்களும் பயன்பெறும் வகையில், நான் முதல்வன் நிறைவு கல்வி என்ற புதிய திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது.
அதன் வாயிலாக மாணவர்களின் மனநிலையை அறிந்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.