/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
25 கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
/
25 கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ADDED : செப் 10, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 25 கர்ப்பிணியருக்கு, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக, தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா முன்னிலையில், கலெக்டர் பிரபுசங்கர், 25 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.