/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நகரி ரயில் பாதைக்கு நிலம் 25 சதவீதம் கூடுதல் தொகை
/
நகரி ரயில் பாதைக்கு நிலம் 25 சதவீதம் கூடுதல் தொகை
ADDED : ஆக 04, 2024 02:10 AM
திருத்தணி,:நகரி--- -- திண்டிவனம் ரயில் பாதை அமைப்பதற்கு, பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை தாலுகாவில் 11 கிராமங்களில் இருந்து விவசாய நிலம் கையகப்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலான விவசாயிகளின் நிலங்களுக்கு இழப்பீடு தொகையாக அரசு நிர்ணயம் செய்த விலை வழங்கப்பட்டுள்ளன.
சில விவசாயிகள் மட்டும் இழப்பீடு தொகை போதாது, கூடுதலாக தொகை வழங்க வேண்டும் என போராட்டம் செய்து வருகின்றனர். சில விவசாயிகள் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் பள்ளிப்பட்டு ஒன்றியம், கர்லம்பாக்கம், பள்ளிப்பட்டு மற்றும் ஐந்து கிராம விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் பங்கேற்று பேசியதாவது:
நகரி—திண்டிவனம் அகல ரயில் பாதைக்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கொடுத்தால், அவர்களுக்கு 25 சதவீதம் கூடுதல் தொகை வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு அந்த தொகையும் போதவில்லை என்றால் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். ரயில் பாதைக்கு விவசாயிகள் தானாக வந்து நிலம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.