/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.8 டி.எம்.சி., நீர் இருப்பு
/
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.8 டி.எம்.சி., நீர் இருப்பு
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.8 டி.எம்.சி., நீர் இருப்பு
பூண்டி நீர்த்தேக்கத்தில் 2.8 டி.எம்.சி., நீர் இருப்பு
ADDED : மார் 04, 2025 07:25 PM
ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் பூண்டி கிராமத்தில் உள்ளது. கொசஸ்தலை ஆற்றின் நடுவே, 1944ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு, 3.23 டி.எம்.சி., மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் முக்கிய நீராதாரம்.
வடகிழக்கு பருவமழை மற்றும் கிருஷ்ணா நீர் ஆகியவற்றால் முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சியளித்தது. சமீபத்தில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, இணைப்பு கால்வாய் வாயிலாக, சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால், பூண்டி நீரின் அளவு குறைய துவங்கியது. பின், தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில், 2.841 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 34,06 அடி. வெயிலின் தாக்கத்தால், 30 மில்லியன் கன அடி நீர் ஆவியாகி வருகிறது.