ADDED : மார் 27, 2024 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர் தனி லோக்சபா தொகுதியில் வேட்பு மனு தாக்கல், கடந்த 20ம் தேதி துவங்கியது. மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று வரை மொத்தம், 31 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்களான தே.மு.தி.க., நல்லதம்பி, பா.ஜ, பொன் வி.பாலகணபதி, காங்., சசிகாந்த் உள்ளிட்ட 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும்.
மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்களது மனுக்களை, வரும் 30ம் தேதி மாலை 3:00 மணி வரை வாபஸ் பெறலாம். அன்றே இறுதி வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் சின்னங்கள் தேர்தல் அலுவலர்களால் ஒதுக்கப்படும்.