ADDED : ஆக 30, 2024 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடைகளில் நேற்று சோதனை செய்தனர்.
கூர்மவிலாசபுரத்தில் இருந்து அத்திப்பட்டு செல்லும் சாலையில் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட 32 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடையின் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து கடைக்கு 'சீல்' வைத்தனர். சுப்பிரமணியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.