/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
320 கிராம் குட்கா பறிமுதல் ரூ. 25,000 அபராதம்
/
320 கிராம் குட்கா பறிமுதல் ரூ. 25,000 அபராதம்
ADDED : ஜூன் 29, 2024 09:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் ஊராட்சி மணவூர் சாலையில் பெட்டி கடை நடத்தி வருபவர் பழனி மனைவி மாரி, 34.
இவர் ஹான்ஸ், போதைப்பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி எஸ்.ஐ., சாரதி தலைமையிலான போலீசார் நேற்று கடையில் சோதனை செய்தனர்.
அப்போது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 320 கிராம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளருக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.