/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.3.69 கோடி மதிப்பில் திருமழிசையில் வளர்ச்சி பணி
/
ரூ.3.69 கோடி மதிப்பில் திருமழிசையில் வளர்ச்சி பணி
ADDED : ஆக 29, 2024 02:13 AM

திருமழிசை:திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில், நேற்று நடந்த பேரூராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், செயல் அலுவலர் வெங்கடேசன் முன்னிலையில், பேரூராட்சி தலைவர் மகாதேவன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், ஜூன் - ஜூலை மாதங்களில் 23 ஆண், 10 பெண் என, மொத்தம் 33 பேர் இறப்பு என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வரவு - செலவு உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு 26.50 லட்சத்தில் டிப்பர் லாரி, 14 லட்சத்தில் சுற்றுச்சுவர், 4.95 லட்சத்தில் ஹைட்ராலிக் பிளாஸ்டிக் இயந்திரம் மற்றும் 3.90 லட்சத்தில் ஸ்கீரினிங் இயந்திரம் என, 49.30 லட்சம் ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து வார்டுகளிலும் சிமென்ட் கல் சாலை, தார்ச்சாலை, சிமென்ட் சாலை உட்பட பல்வேறு பணிகளுக்கு, 3 கோடியே 20 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு என, மொத்தம் 3 கோடியே 69 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறவேற்றப்பட்டது.
மேலும், சொத்து வரி பாக்கி 1.89 கோடி ரூபாயை வசூலிக்க வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை உட்பட அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கும் பணி நடந்து வருவதாகவும் பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.