ADDED : ஏப் 14, 2024 01:31 AM
அ நிறம் | அளவு
திருத்தணி:அரக்கோணம் லோக்சபா தொகுதியில் வரும் 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில் உள்ள 330 ஓட்டுச்சாவடிகளில், 1, 600 பேர் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு நேற்று திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லுாரியில், 3ம் கட்ட பயிற்சி நடந்தது.
பயிற்சியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான க.தீபா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, 27 மண்டல அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில், திருத்தணி தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் துணை தாசில்தார்கள் பங்கேற்றனர்.
