/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சர்ச் உண்டியல் திருட்டு பெண் உட்பட 4 பேர் கைது
/
சர்ச் உண்டியல் திருட்டு பெண் உட்பட 4 பேர் கைது
ADDED : பிப் 27, 2025 01:25 AM

புழல்:புழல், லட்சுமிபுரம் விவேகானந்தர் தெருவில் துாய ஆரோக்கிய மாதா சர்ச் உள்ளது. கடந்த 24ம் தேதி, இங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது. புழல் போலீசாரின் விசாரணையில், நான்கு பேர் கும்பல் ஆட்டோவில் வந்து திருடியது தெரியவந்தது.
ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து, கொளத்துார் ரெட்டேரி சாலை சந்திப்பில் நின்ற ஆட்டோவை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்தனர்.
இதில், நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த நந்தகுமார், 54, என்பதும், கூட்டாளிகளான, பொழிச்சலுார் சங்கர், 46, பிரபு, 49, மற்றும் கோவிலம்பாக்கம் நிஷா, 38, ஆகியோருடன் சேர்ந்து, சர்ச்சில் உள்ள மர உண்டியலை உடைத்து, 20,000 ரூபாய் திருடியதும் தெரியவந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார், 6,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

