/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
416 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் திருவள்ளூரில் காலி
/
416 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் திருவள்ளூரில் காலி
416 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் திருவள்ளூரில் காலி
416 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் திருவள்ளூரில் காலி
ADDED : ஜூலை 11, 2024 01:00 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் 873 துவக்கப்பள்ளிகள், 238, நடுநிலைப்பள்ளிகள், 123, உயர்நிலைப்பள்ளிகள், 102, மேல்நிலைப்பள்ளிகள், என 1,336 அரசு பள்ளிகள் உள்ளன.
இதில் 77 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 78 மேல்நிலைப்பள்ளிகள் என 155 அரசு பள்ளிகளில் 416 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவர்களின் கல்விக் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.