/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 42 கால்நடைகள் பறிமுதல்
/
திருவள்ளூரில் 42 கால்நடைகள் பறிமுதல்
ADDED : ஜூலை 17, 2024 12:44 AM
திருவள்ளூர்,திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 42 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த கால்நடைகள் திருப்பி ஒப்படைக்கப்படமாட்டாது எனவும், நகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் உள்ள ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, தேரடி, செங்குன்றம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நேரிட்டு வருகின்றன.
இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி, சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் இனிமேல் பறிமுதல் செய்யப்பட்டால், அவை திருப்பித் தரப்படமாட்டாது என, நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையிலான சுகாதார ஊழியர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்த, 42 கால்நடைகளை பிடித்தனர்.