/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
42 கிலோ குட்கா பறிமுதல் வாலிபர் கைது
/
42 கிலோ குட்கா பறிமுதல் வாலிபர் கைது
ADDED : ஜூன் 28, 2024 02:59 AM

திருத்தணி:ஆந்திராவில் இருந்து காரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் திருத்தணி பகுதிக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின்படி தனிப்படை எஸ்.ஐ., குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில், திருத்தணி பொன்பாடி சோதனையில் வாகன தணிக்கை நடத்தினர்.
அப்போது ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த காரை தனிப்படை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, 42 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்கள் மத்துார் பகுதிக்கு கொண்டு சென்று அதிகவிலைக்கு விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது.
குட்கா கடத்தி வந்தவர் திருத்தணி ஒன்றியம் மத்துார் காலனி சேர்ந்த அன்பு, 29 எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து திருத்தணி போலீசார் அவரை கைது செய்தனர்.