தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 485 பேரின் ஓட்டு மிஸ்ஸிங்

485 பேரின் ஓட்டு மிஸ்ஸிங்

485 பேரின் ஓட்டு மிஸ்ஸிங்


ADDED : ஏப் 03, 2024 09:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 09:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவொற்றியூர்:திருவொற்றியூர் மேற்கு, சார்லஸ் நகரில், நான்கு தெருக்கள் உள்ளன. இப்பகுதி, 163 - 164 என, இரு ஓட்டுச்சாவடி மையங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 163வது ஓட்டுச்சாவடியில் 911 ஓட்டுகளும்; 164ல், 1,200 ஓட்டுகளும் உள்ளன.

பெயர் விடுபட்ட 50க்கும் மேற்பட்டோர், சார்லஸ் நகர், தேவி கருமாரியம்மன் கோவில் முன் நேற்று கூடி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் கூறியதாவது:

கடந்த கவுன்சிலர் தேர்தலில் ஓட்டளித்த பலரது பெயர், இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது. அதன்படி, 485 பெயர்கள் விடுபட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us