/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
/
ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
ADDED : ஆக 30, 2024 08:56 PM
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த சீமாவரம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், சட்டவிரோதமாக ஆற்றின் கரைகளை உடைத்து, இரவு நேரங்களில் மணல் திருடப்படுகிறது.
இது தொடர்பாக தொடர் புகார்கள் வந்த நிலையில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக இரவு நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபடும் மணல் கொள்ளையர்கள், நேற்று பகல் நேரத்தில் ஜே.சி.பி., இயந்திரம் உதவியுடன் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜே.சி.பி., டிரைவர்கள் மீஞ்சூர் பகுதியை சேர்ந்த கவுதம், 29, வினோத்குமார், 37, பாபு, 58, பாஸ்கர், 45, மணிகண்டன், 37, ஆகியோரை கைது செய்தனர். இரண்டு லாரிகள், ஜே.சி.பி., இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.