/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார் ஒன்றியத்தில் 51.53 லட்சத்தில் வளர்ச்சி பணி
/
கடம்பத்துார் ஒன்றியத்தில் 51.53 லட்சத்தில் வளர்ச்சி பணி
கடம்பத்துார் ஒன்றியத்தில் 51.53 லட்சத்தில் வளர்ச்சி பணி
கடம்பத்துார் ஒன்றியத்தில் 51.53 லட்சத்தில் வளர்ச்சி பணி
ADDED : செப் 10, 2024 06:20 AM
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில் 24வது ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிசேகர், செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை வகித்தார்.
கடம்பத்துார் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகளில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஓட்டுச்சாவடி சீரமைப்பு பணி மேற்கொண்டதற்கு 2.50 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து விடையூர், புதுமாவிலங்கை, தொடுகாட, கண்ணுார் ஆகிய ஊராட்சிகளில் ஆழ்துளை கிணறு மற்றும் பைப் லைன் விரிவுபடுத்துதல் மற்றும் மின்மோட்டார் பழுது பார்த்தல் பணிகளுக்கு 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கீழச்சேரி ஊராட்சியில் புனித அன்னாள் துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் துவக்க விழாவிற்கு முதல்வர் வருகைக்காக ஒன்றிய பொது நிதியிலிருந்து 15.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தார் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
குமாரசேரி, இருளஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் சிமென்ட் சாலை, பைப் லைன், கால்வாய் பணிகளுக்கு 9 லட்சம் என மொத்தம் 51 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.