/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரக்கோணத்தில் குட்கா விற்ற 6 கடைகளுக்கு 'சீல்'
/
அரக்கோணத்தில் குட்கா விற்ற 6 கடைகளுக்கு 'சீல்'
ADDED : மே 25, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:ராணிபேட்டை எஸ்.பி., கிரண் ஸ்ருதி உத்தரவின்படி அரக்கோணம் டவுன் மற்றும் தாலுக்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த நேற்று சோதனைசெய்யப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் தலைமையில் போலீசார் அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களான கீழாந்துரை, அன்வர்திகான்பேட்டை, குருவராஜபேட்டை, வளர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல் வைத்தனர். ஒவ்வொரு கடைக்கும் 25ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.